indexதிருவ்ற்றியூரை அடுத்த சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த ரித்திகாவின் கொலை எனக்குச் சமுக வலைதளங்கள் மூலம் முதலில் தெரிந்துக் கொண்டேன். பின்பு பல பரவலாகிய ரித்திகாவின் தேடல்களை தெரிந்துக்கொண்டேன். இதையெடுத்து 20.02.2017 அன்று எனது தோழர் பாரதி மூலம் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்று மாலை 6 மணியளவில் அங்கு இருவரும்  சென்றோம்.  பரபரப்பு நிறைந்து அப்பகுதியில் நுழையும் முன்பே காவலர்களின் எண்ணிக்கை சற்றும  அதிகமாகவே இருந்தது. உள்ளே சென்று சிறுமியின் வீட்டை நானும் என் நண்பர் பாரதியும் நெருங்கினோம். பந்தல் கட்டிய வீட்டின் வாசலில் சிலர் அங்கும் இங்கும் அமர்ந்து சிறுமியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டின் உள்ளே ரித்திகாவின் தாய் மயக்க நிலையில் படுத்திருந்தார். நானும் என் நண்பனும் அங்குச் சென்று அதைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம்.சுற்றியிருந்த அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவத்தைப் பற்றி சற்று விரிவாகக் கூறினர்.

சம்பவத்தைப் பற்றிய மக்களின் பதிவு :

ரித்திகா 3வயது சிறுமி துடிப்புடன் இருப்பவள். திறமையான வாய்ப்பேச்சாளர் என்றெல்லாம் கூறினர். நடந்ததை எவ்வளவு மாதம் கழித்து கேட்டாலும் அப்படியே கூறும் திறம் படைத்தவர் என்றெல்லாம் கூறினர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரித்திகாவை எதிர் வீட்டுக்கும் அடுத்து உள்ள குடியிருப்பில் இருக்கும் (இவள் ரித்திகாவின் வயதை ஒட்டிய) சிறுமி விளையாட அழைத்துள்ளாள் ரித்திகாவின் தாயாரும் எப்பொகுதும் செல்லும் இடம் தானே என்று அனுப்பி உள்ளார்.சிறுமியின் கழுத்தில் கயிற்றுடன் தங்க டாலர் அணிந்திருக்கிறார்,இடுப்பில் அரைநாண் கயிறு வெள்ளியிலும், காலில் வெள்ளிக் கொலுசும் அணிந்திருந்ததாகவும் கூறினர்.இரவு 8மணி ஆகியும் விளையாடச் சென்ற குழந்தை வரவில்லை என்ற பதற்றத்தில் அந்த வீட்டில் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அந்த வீட்டில் உள்ள பெண்மணி குழந்தை இங்கு இல்லை என்று கூறிவிட்டார். அங்கு உள்ள அனைவரும் பதற்றம் அடைந்து குழந்தையைத் தேடச் சென்றனர். சிறுமி கிடைக்காததால் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். காவல் நிலையத்தில் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல் கண்டுபிடித்து தருவதாகக் கூறியுள்ளனர்.பெற்றோரின் மனநிலை சிறுமி கடத்தப்பட்டு தான் இருப்பால் என்றும் மீண்டும் கிடைத்து விடுவாள் என்றும்  இருந்தது
17.02.2017அன்று தொலைந்த சிறுமி மூன்று நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் 19.02.2017 அன்று காலை 11மணி அளவில் காவல் துறையினரிடமிருந்து ரித்திக்காவின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. அழைப்பில் திருவெற்றியூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஒரு பெண் குழந்தையின் சடலம் கிடப்பதாகவும் அதை அடையாளம் காண வருமாறு கூறியுள்ளனர் ரித்திக்காவின் பெற்றோர் மனம் உடைந்து அங்கு சென்றுள்ளனர்riththikaa-photos . (படத்தில் காட்டிய நிலையில் சிறுமி கிடந்திருக்கிறாள் ).ரித்திகாவின் சடலத்தைக் கூட அவரின் பெற்றோரால் கண்டுக் கொள்ள முடியாத நிலையில் சடலம் இருந்திருக்கிறது .பின்பு சிறுமியின் கையில் கிடந்த வளையல்களை வைத்துத் தான் தன் குழந்தை என்று கண்டனர்.பின்பு துடித்த பெற்றோரின் மனநிலை நடைப்பிணமாகத் தான் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது .

சிறுமியின் மரணம் எதனால் நிகழ்ந்தது :

எதிர் குடியிருப்பில் குடியிருக்கும் “ரேவதி” இவருக்கு 2 குழந்தைகள் மற்றும் அவர் கணவர் மேல்மருவத்தூரில் உள்ளார் என்றும் இருவருக்கும் இடையில் விவாகரத்து நடந்துவிட்டதாகவும் தெரியவந்தது.ரேவதி தன் அம்மா வீட்டில் தான் இருந்திருக்கிறாள் .அப்பா,அம்மா,தன் இரண்டு அண்ணன்களுடனும் ரேவதி அவள் குழந்தைகளுடனும் வசித்து வந்துள்ளார் . அவர் தங்கிருக்கியிருக்கம் வீடு வேறு ஒருவரின் பெயரில் உள்ளது என்றும் அவரின் வீட்டை ரேவதிக்கு வாடகைக்கு விட்டுஇருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. தனது வீட்டிற்கு வாடகை கொடுத்து பத்து மாதங்களுக்கு மேல் ஆவதால் வீட்டின் வாடகை பணம் தர முடியாத கரணம் தான் சிறுமியை கொலை தூண்ட காரணம் என அங்கு உள்ள ஊர் மக்களும் அவரின் பெற்றோரும் கூடக் கூறினர். நகை மேல் இருந்த ஆசையால் குழந்தையின் நகைகளை கழட்டி அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த 2500 ரூபாயை பெற்றுள்ளார் . ரித்திகாவின் பெற்றோர் தன் குழந்தையை காணவில்லை என்று பரபரப்புடன் தேடி கொண்டிருக்கும் நிலையில் கிடைத்த 2500 ரூபாயை செலவு செய்து ஐஸ் கிரீம் வாங்கி தின்றதாக அங்கு உள்ள மக்கள் என்னிடம் கூறினர் . பின்பு நடந்ததை மறைக்க ரித்திகாவின் வாயில் துணியை அமுக்கி கொன்று அந்த குழந்தைrithhயை கட்டைப் பையில் போட்டு குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் போட்டு விட்டதாகவும் , பின்னர் மறு நாள் குப்பை அகற்றுபவர்கள் அந்த குப்பைகளை ஒன்று சேர்த்து திருவெற்றியூர் மாநகராட்சி குப்பை கிடங்கிற்குக் கொண்டு போய் கொட்டிவிட்டதாகவும் கூறினார்கள். குப்பையை எரிப்பதற்காக எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து எரித்துள்ளனர்.அப்போது அங்கு இருந்த நாய் சடலத்தின் வாசம் அறிந்து எரிந்துகொண்டிருந்த குப்பை கிடங்கிலிருந்து சிறுமியின் சடலத்தை வெளியே இழுத்து கொண்டு வந்தது.பிணத்தை பார்த்து ,நாயை விரட்டி விட்டு சடலத்தை கைப்பற்றி காவல் துறையினருக்கு தெரியப்படுத்தி உள்ளதாக கூறினார்கள். அதன் பின் தான் காவல் துறையினர் அங்கு சென்றுள்ளனர். இவை அனைத்தும் நான் அங்கு சென்று அந்தப் பகுதி மகள்களால் சேகரிக்கப்பட்டவை. மக்களும் பெற்றோரும்என்னிடம் இவ்வாறு கூறினார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாகவே நான் அங்கு இருந்து எல்லோரிடமும் பேசிவிட்டு தான் வெளியேறினேன் .

என்னை வாட்டிய தாயின் கதறல் :

என் குழந்தை மண்ணில் விளையிடானால் அழுக்கு படியும் என்று அவளை எங்குமே விட்டதில்லை ,ஆனால் என் குழந்தையை குப்பை கிடங்கில் மக்கிப் போய் கிடப்பதை பார்த்து துடிக்கிறது என்று கதறினாள். வெறும் நகைக்காக  தான் என் குழந்தையை கொன்று இருந்தால் என்னிடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்றும்  கதறிய கதறல் என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது . நகைகளை போட்டால் என் குழந்தை சாகும் என்று தெரிந்திருந்தால் நான் நகைகளை போட்டு விட்டு இருக்க மாட்டானே என்று கண்ணீர் மல்க அழுத வார்த்தைகளை கேட்டு அங்கு பெண்ணாய் பிறந்தும் ஆறுதல் கூற முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். அழுது மயங்கிய நிலையில் இனி வர போவதில்லை தன் குழந்தை, தன்னுடன் விளையாடும் குழந்தை திரும்பக் கிடைக்காது என்று தெரிந்து கண்ணீரை முடக்கி வார்த்தைகளை ஊமையாக்கி தன்னை அமைதிப் படுத்தி இருந்த தந்தையின் கண்களைப் பார்த்தேன். ஆறுதல் கூற வார்த்தைகளைத் தேடி கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்

21.02.2017 அதிர்ச்சியில் விழித்த நான் :

வெறும் பணம் பேராசையால் தான் குழந்தையை கொன்றனர் என்று வீடு திரும்பிய எனக்கு மறுநாள் திடுக்கிடும் தகவல்களை சமூக வலைத்தளங்களிலும் , ஊடகங்களிலும் தெரிந்துகொண்டேன். ரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் தான் கொல்லப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவின.பதற்றமடைந்த நான் பாதிக்கப்பட்ட ரித்திகாவின் வீட்டிற்கு தொலைபேசியில்தொடர்பு கொண்டேன் அவர்கள் அவ்வாறு இல்லை வெறும் நகைக்காகத் தான் என்றும் எங்களுக்கு அது போன்ற தகவல்கள் வரவில்லை என்றும் கூறினர் .ஆனால் ஊடகங்களில் பாலியல் பலாத்காரம் என்று தான் செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன .இன்னும் முதல் தகவல் தெரிவிப்பு அறிக்கை(FIR)போடவில்லை என்றும் காலை வரை தகவல்கள் வெளியாகியுள்ளன.காவல் துறையினரிடம் எனக்கு எழுந்த சந்தேகம் உடற் கூராய்வில் பாலியல் வன்கொடுமை செய்து தான் சிறுமி கொள்ளப்பட்டு இருக்கின்றாள் என்பதை அறிந்த காவல் துறை ஏன் இன்னும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் என் முதல் கேள்வி. இதற்கிடையில் ஊடகங்களில் ரேவதியின் தந்தை தான் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , அதற்கு  நான் உடன் இருந்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எது உண்மை நிலவரம் என்று யாராலும் கணிக்க முடியாத நிலைக்கு நானும் என்னைச் சார்ந்தவர்களும் உள்ளோம் .

பாலியல் வன்கொடுமை :

நந்தினி மற்றும் ஹாசினியை தொடர்ந்து வரிசை பட்டியல் மாதிரி ரித்திகாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இன்னும் மேல் கூறப்பட்ட இருவரின் கொலை சம்பவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று இருக்கும் நிலையில் இப்பொழுது ரித்திகா பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் பெண்கள் உடை அணிவது தான் என்று பலர் கூறியுள்ளனர் .இப்பொழுது நான் கேட்கிறேன் மூன்று வயது சிறுமியின் எந்த ஆடை உங்களைக் கவர்ந்தது . மூன்று வயது சிறுமியிடம் என்ன சுகத்தை எதிர்பார்த்து இவ்வாறு செய்தீர்கள் என்று நினைக்கும் பொழுது என்னைப் போல 18 வயதிற்கும் மேற்பட்டு இருக்கும் பெண்களிடம் உங்களின் பார்வை என்னவாக இருக்கும் . மனம் வருந்தி கூறுகிறேன் பெண்ணாக பிறந்ததால் பெருமிதம் கொண்டு வாழ்ந்து வந்த நான் பெண்களுக்கு மட்டுமே இவ்வாறான கொடுமைகள் திணிக்கபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் . என் அம்மா,என் அக்கா, என் தங்கை, என் குழந்தை, என் தோழி என்று பெண்களில் ஒருத்தியாய் நானும் என் பெண்ணினத்திர்காக போராட களம் இறங்க உள்ளேன் .இவர்களின் மரணம் குறித்த தீர்வு கிடைக்கும் வரை நானும் பெண் என்பதை காம கொடூரர்களுக்கு தெரியபடுத்துகிறேன்.

ஒரு ரித்திகா இறந்தால் என்ன நிச்சயம் அவளின் மரணம் பல நுறு ரித்திகாவை உருவாக்கும்.

Advertisements