திருவெற்றியூர் சுனாமி குடியிருப்jjjjபு பகுதியில் நடந்த சிறுமி ரித்திகாவின் மரணம் .மூன்று வயது சிறுமி கொல்லப்பட்டதை அறிந்த நான் பதறினேன் .எதனால் கொலை நடந்திருக்கும் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நகைக்காக தான் கொலை நடந்தது என்று அந்த கேள்விப்பட்டதும் அந்த குடியிருப்புக்கு சென்றேன் . நகைக்காக கொன்றதாக கூறி என்னிடம் ரித்திகாவின் பெற்றோர்கள் புலம்பினார்கள் ஆனால் இன்று உடற்கூராய்வில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .அந்த நிமிடம் என் மனநிலை மிகவும் பதறிப்போனது.இளம் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை படிப்படியாய் வளர்ந்து சிறுமியிடம் தாவ ஆரம்பித்துள்ளது. பட்டியல் போடும் அளவிற்கு நீண்டுள்ளது. நிர்பயா வில் ஆரம்பம் ஆகி இன்று ரித்திகாவை நோக்கி காம வெறிபிடித்தவர்கள். அந்த நிமிடம் எழுந்த கோபத்திற்கு அளவே இல்லை. நான் கத்தினால் மட்டும் மாறிவிடுமா? இந்த சமூகம் என்ற கேள்விக்கு தள்ளப்பட்டேன். சிறுமிகள் சிதைக்கப்படுகிறார்கள் இந்த காம வெறியர்களால். யாருடா நீங்களெல்லாம் தாய்நாட்டில் உடன் பிறந்தவர்களாக தான் பார்க்கிறோம்.ஏன் காமவெறிக்காக பிறந்தது போல் உங்களின் எண்ணமும் இந்த மாறுதல்களும் உள்ளது.காமம் தான் உங்களின் கண்களை மறைக்கின்றதா ? உன் தாய், சகோதரி, மனைவி, உன் குழந்தை இவர்களும் பெண்கள் தானே? அப்போது எங்கே போனது உனது காம வெறி?மனமில்லாத மனிதனாய் வாழ்பவனே அறிவில்லாத மிருகமாய் ஏன் திரிகிறாய்.நீ செய்யும் அசிங்கத்தால் என் பெண் இனமே அச்சப்படுகிறது.குழந்தையில் தொடங்கி முதியவர் வரை பயம் எங்களை வாட்டுகிறதடா. முதலில் காதலிக்கவில்லை என்று கூறினால் ஆசிட் அடிப்பதில் தொடங்கி அரிவாள் வெட்டு வரை சென்றீர்கள். இப்பொது சுருமி ஏன்னு கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இனி இந்த உயிர் எதற்கு என்று கொன்றுவிடும் கொலைகாரனே! உனக்கு இன்னுமா புரியவில்லை நீ வாழும் நாட்டின் பெயர்கூட தாய் நாடு என்று பெண்மையால் சூட்டப்பட்டுள்ளது. இநத அரசாங்கமும் சரி, இந்த நாட்டு மக்களும் சரி எத்தனை நாள் தான் விழிப்புணர்வை நாடி இருப்பார்கள் என்று தெரியவில்லை.குற்றவாளிகளுக்கு தண்டனை தான் என்ன? படுத்து உறங்க அறை, நிம்மதியான அமைதியான இடம், வெகுநாள் சிறை மட்டுமா? மனித உரிமை ஆணையமே எங்கே சென்றாய்? இப்படி ஒரு கொடூரவாதிகளை வேரோடு களை எடுக்க முன்வரமாட்டாயா? பெண்களைக் காக்க வேண்டிய காவல் துறையே பேடிகளை நன்றாக சிறையில் பாதுகாத்து கொள்ளுங்கள்.பெண்களின் சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கவைத்துவிட்டீர்களே?பாலியல் கொடுமையிலிருந்து எப்போது பெண் இனம் மீட்க்கப்படும்? பெண்கள் ஆடை அணியும் முறை சரியில்லாததால் தான் பாலியல் தொல்லை நடப்பதாக கூறினீர்கள்.இன்று மூன்று வயது சிறுமியின் எந்த ஆடையடா அணிந்திருந்தாள் உங்களின் காமவெறிப்பிடித்த மனதை ஈர்க்க . ஆணாக பிறந்த நீ ஏன் காம வெறிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாய்? இதற்காகவே எத்தனையோ இடங்களில் அரசு அனுமதி வழங்கி நடத்தி கொண்டிருக்கிறது அங்கு சென்று உன் வெறியை சுகத்தை அடைந்துக்கொள்ளலாமே.பள்ளி செல்லும் மாணவியையும்,பச்சிளம் குழந்தையையும் ஏன் சுரண்டுகிறாய்.ஏன் பாலுணர்வு பெண்களுக்கு ஏற்படாதா? ஒரு பெண்ணும் ஆணும் விரும்பி சென்றால் அது அவர்களின் சுதந்திரம் .பாலியல் வன்கொடுமை என்பது அடுத்தவர்களின் சுதந்திரத்தை அழிப்பது உனக்கு தெரியவில்லையா? மனம் உடைந்து போய்விட்டது இதை விட உன்னை எந்த சொற்களால் வன்மையாக கண்டிப்பேனடா என் பெண் இனம் காக்க. ஆணினம் திருந்தினால் அனைத்தும் திருந்திவிடும் என்கிறேன் நான். உன்னால் என்னை பெற்றெடுத்த என் தகப்பனையும், என் தோழ் கொடுக்கும் தோழனையும், என்னுடன் வந்து என்னோடு பயணம் செய்யும் என் கணவனையும் பார்த்து நீயும் ஆணினம் தானடா என்று கேட்கும் நிலையை ஏற்படுத்திவிட்டாயே. பாலியல் கொடுமை செய்யும் கொடூரனை வன்மையாக கண்டிக்க வேண்டும். பிறப்பால் நானும் ஓர் பெண் என் இனத்திற்காக நானும் இன்னும் சற்று தினங்களில் களம் இறங்கிப் போராடுவேன்.ஒரு ரித்திகா இறந்தால் என்ன இன்னும் பல நூறு ரித்திகாக்கள் என்னை போல் உருவெடுப்பார்கள்.சீட்டுக்கு சண்டை போடும் ஊட்டு போட்டு எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வைத்தால் உன் சீட்டிற்கு ஆசைப்பட்டு என் பெண் இனம் உருவாகும் முன்பே அழிவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.சற்று திரும்பி பார் பெண் இனம் படும் இன்னல்களை. புதிய சட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் மாறாது ஆண்களின் காமவெறி.மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்தே பாலியல் கல்வி முறையை கொண்டு சென்றால் தான் பாலியல் என்ற வார்த்தைக்கவது அர்த்தம் புரியும்.மாணவனாக வளரும் போதே அவன் பெண்ணை மதித்து பெண்ணியம் பேசினால் இளைஞனாய் வளர்ந்ததும் காமவெறியின் சுகம் அவன் கண்ணுக்கு தெரியாது. ஆணும் பெண்ணும் இங்கு சரிசமம்.பாலின சமூகத்தை பாதுகாப்போம்.நிர்பயா விலிருந்து ரித்திகா, இன்னும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்காக ஒன்று சேர்ந்து கைக்கொடுப்போம்! தொடர்ந்து குரல் கொடுப்போம்! நியாயத்திற்கு துணைநிற்போம்!

Advertisements